திருச்சி மாவட்டம், வெங்கடாசலபுரம் ஊராட்சியில் பெருமாள் கோவில் அருகே சாலையோரம் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால் சில இடங்களில் புதர்மண்டி காணப்படுவதாலும், தூர்வாரப்படாததாலும் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.