சாலை அமைக்க கோரிக்கை

Update: 2023-11-19 17:07 GMT

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் சுகாதார வளாகத்தை ஒட்டி மண் சாலை உள்ளது. இந்த சாலை மழை காலங்களில் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் வழுக்கி விழுந்து விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இங்கு சாலை அமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்