ராமநாதபுரம் நகரில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பல வருடங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அது பலனளிக்காமல் தெருக்களில் சாக்கடைநீர் ஆறாக ஓடுகிறது. பல பகுதிகளில் சாக்கடைநீர் வெளியேற வழியின்றி தேங்கி நோய் பரவ காரணமாக உள்ளது.எனவே பாதாள சாக்கடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.