திருவள்ளூர் மாவட்டம், கூடப்பாக்கம் ஊராட்சி கலெக்டர் நகர் தெருவில் கழிவுநீர் தேங்கி உள்ளது. மேலும் அதனுடன் மழைநீரும் சேர்ந்து சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் கொசுக்கள் அதிகளவில் காணப்படுகிறது மற்றும் துர்நாற்றம் அதிகளவில் வீசுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.