உடைந்த சிமெண்டு சிலாப்புகள்

Update: 2023-11-19 13:29 GMT

அரியலூர்-செந்துறை சாலையில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்காலின் மேல் போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்புகள் பல இடங்களில் பெயர்ந்துள்ளது. இந்த பகுதியில் சிறுவர்கள் நடமாட்டம் அதிகம் என்பதால், அவர்கள் இந்த சிமெண்டு சிலாப்பின் மீது செல்லும் போது உடைந்து விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் ஒரு துளைகளில் இருந்து இரும்பு கம்பிகள் நீட்டிக்கொண்டு இருக்கின்றன. அவை பொதுமக்களின் கால்களில் காயம் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்