திருச்சி எடமலைப்பட்டிப்புதூர் ராமச்சந்திரா நகர் மெயின் ரோடு பகுதியில் உள்ளது ரெங்கா- காவிரி அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் போதுமான கழிவுநீர் வடிகால் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் கழிவுநீர் குடியிருப்பு வளாகத்திற்குள் குட்டை போல் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.