ராமநாதபுரம் மாவட்டம் 33-வது வார்டு இளங்கோவடிகள் தெருவில் பாதாள சாக்கடை நீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.