கோவை மாநகராட்சி 81-வது வார்டு தாமஸ் வீதி தியாகி குமரன் சந்திப்பில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுகிறது. இதன் காரணமாக அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.