நோய் பரவும் அபாயம்

Update: 2023-10-29 13:38 GMT

மதுரை மாநகராட்சி 49- வது வார்டுக்கு உட்பட்ட காமராஜபுரம், எம்.ஜி.ஆர். தெருவில் நீண்ட நாட்களாக பாதாள சாக்கடை ஆள் இறங்கு குழியில் இருந்து கசிவு ஏற்பட்டு கழிவுநீர்  ஓடுகிறது.. இதனால் இந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி டெங்கு மற்றும் டைபாய்டு காய்ச்சல் அதிக அளவில் பரவி வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் மாநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை..எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா?

மேலும் செய்திகள்