ஆயக்குடி குறிஞ்சிநகரில் கழிவுநீர் கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர். அதேபோல் கடும் துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற வேண்டும்.