கடையநல்லூர் தாலுகா இடைகால்- காசிதர்மம் மெயின் ரோட்டில் புதிய வாறுகால் அமைக்கப்பட்டது. அப்போது அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் வாறுகால் மீது பாலம் முழுமையாக அமைக்காததால், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே வாறுகால் பாலத்தை முழுமையாக அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.