கோவை ஹோப்ஸ் கல்லூரி பகுதியில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் காமராஜர் சாலையில் ஒரு தியேட்டர் அருகில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் ஓய்வெடுக்க இருக்கை வசதியுடன் கூடிய நிழற்குடை உள்ளது. ஆனால் கீழ் பகுதியில் சாக்கடை கால்வாய் ஓடுகிறது. அந்த கால்வாயை புதர் செடிகள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் கால்வாயை கடந்து நிழற்குடைக்குள் செல்ல முடியவில்லை. இதனால் அதை பயன்படுத்த முடியாமல் பயணிகள் அவதிப்படுகிறார்கள். எனவே இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.