கவுந்தப்பாடி புதூர் 4-வது குறுக்கு தெரு 3-வது கிளை வீதியில் கடந்த ஒரு ஆண்டாக சாக்கடை வடிகால் சேதமடைந்துள்ளது. அதனால் கழிவு நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறாக உள்ளது. அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அபாயத்திலிருந்து காக்க வழிவகைசெய்ய நடவடிக்கை எடுப்பார்களா?