கோவை பீளமேடு பிளேக் மாரியம்மன் கோவில் பின்புறம் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த சாக்கடை கால்வாயில் கழிவுகளை அகற்றிவிட்டு, சாலையோரத்தில் குவித்து வைத்து உள்ளனர். மேலும் அங்கு குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே அங்கு சாக்கடை கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும்.