காவேரிப்பாக்கம் பேரூராட்சி 13-வது வார்டில் புதிதாக கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி நடந்தது. அப்போது ஒரு மின்கம்பத்தை ஒதுக்கி கட்டாமல், நடுவிலேயே கம்பத்தை வைத்து கால்வாய் கட்டப்பட்டுள்ளது. அந்தக் கம்பத்தை பிடுங்கி சற்று ஓரமாக நட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஏழுமலை, காவேரிப்பாக்கம்.