குடியாத்தம், புதுப்பேட்டை, பீமராஜ முதலி தெருவில், கழிவு நீர் கால்வாய் தூர்வாரப்பட்டது. தூர் வாரிய குப்பைகளை அங்கேயே விட்டு விட்டதால், மழை பெய்யும்போது தெருவில் மழைநீருடன் சாக்கடை கழிவுகளும் தேங்கி குட்டை போல் காட்சி அளிப்பதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அகற்றப்பட்ட கழிவுகள் மீண்டும் அதே கால்வாய்க்குள் சென்று அடைப்பு ஏற்படுகிறது. எனவே தூர் வாரிய கால்வாய் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும்.