வாலாஜா தென்றல் நகரில் ஏராளமான வீடுகள் உள்ளன. அந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நகரில் கால்வாய் வசதி ஏற்படுத்தி தருவார்களா?
-பொதுமக்கள், வாலாஜா, தென்றல்நகர்.