பேரணாம்பட்டு காமராஜர் நகர் மசூதிதெருவில் மழைப் பெய்யும்போதெல்லாம் மழைநீர் தெருவில் தேங்கி ஆறாக ஓடுகிறது. எங்கள் தெருவில் ஒரு பக்கம் மட்டுமே கால்வாய் வசதி உள்ளது. மற்றொரு பக்கம் கால்வாய் கட்டப்படவில்லை. எங்கள் தெருவில் இரு பக்கமும் கால்வாய் வசதி இருந்தால் மழைநீரும், கழிவுநீரும் விரைந்து ஓடும். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, எங்கள் தெருவில் மற்றொரு பக்கம் கால்வாய் கட்டித்தர வேண்டும்.
-டில்லிபாபு, காமராஜர்நகர், பேரணாம்பட்டு.