சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு பஜார் வீதி 17-வது வார்டு பாண்டியநெல்லூர் போகும் சாலையில் ஏரிக்கால்வாய் உள்ளது. பெரிய கால்வாய் 10 அடி அகலம் கொண்டது. சிறிய கால்வாய் 8 அடி அகலம் ஆகும். சிறிய கால்வாய் ஒருவரின் நிலத்தையொட்டி உள்ளது. அந்த நிலத்துக்காரர் சிறிய கால்வாயை ஆக்கிரமித்து காணி கம்பம் மற்றும் கட்டுக்கல் சுவர் அமைத்து விட்டார். மழைக்காலத்தில் நீர் ஓடாமல் வீடுகளில் புகுந்து விடுகிறது. கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள்,கிழக்கு பஜார் வீதி சோளிங்கர்