உடைந்த கால்வாய் சரிசெய்யப்படுமா?

Update: 2022-09-20 09:34 GMT

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டத்தில் உள்ள கரிப்பூர் கிராமத்தில் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் முன்பு கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இதை கடந்துதான் சிறுவர்கள் பள்ளிக்கு செல்கிறார்கள். பள்ளி முன்பு கால்வாய் மீது போடப்பட்டுள்ள சிமெண்டு மூடி உடைந்து பெரிய பள்ளமாக காட்சியளிக்கிறது. மாணவர்கள் நடமாடும் பகுதி என்பதால் விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு கால்வாய் மூடியை சரிசெய் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்