வேலூர் சேண்பாக்கத்தில் காந்தி சிலை அருகே வடிகால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதில் ஏராளமான குப்பைகள் வந்து சேருவதால் அடைப்பு ஏற்படுகிறது. கழிவுநீர் சரியாக ஓடாமல் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. கால்வாயில் உள்ள குப்பைகளை அகற்றி தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவா, சேண்பாக்கம்.