வேலூர் மாநகராட்சி 53-வது வார்டு விருபாட்சிபுரம் காந்திநகர் 9-வது தெருவில் உள்ள 2-வது இடது தெருவில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. 10 ஆண்டுகளாக தெரு அப்படியே உள்ளது. எந்த ஒரு வசதிகளும் செய்து தரப்படவில்லை. எங்கள் தெருவுக்கு அடிப்படை வசதிகளான கழிவுநீர் கால்வாய், சிமெண்டு சாலை அமைத்துத் தர வேலூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.கார்த்திக், வேலூர்.