கிருஷ்ணகிரி நகராட்சி பணியாளர்களுக்கான குடியிருப்புகள் ராசு வீதியில் உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. அதே சாலையில் ரேஷன் கடை ஒன்றும், முதியோர் இல்லம் ஒன்றும், ஆரம்ப சுகாதார மையம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் இந்த சாலையில் செல்லக்கூடிய கழிவு நீரை தடை செய்ய அந்த பகுதியில் கால்வாய் அமைத்து சுகாதாரம் பேணுவதற்கு முன்வர வேண்டும்.