தெருவில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-01-18 16:31 GMT


சின்னமனூர் ஒன்றியம் சீப்பாலக்கோட்டை கிராமத்தில் காளியம்மன் கோவில் தெருவில் முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் தெருவில் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்க சாக்கடை கால்வாய் வசதி செய்து தரவேண்டும்.


மேலும் செய்திகள்