கம்பம் ஆங்கூர் ராவுத்தர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் ஏற்கனவே இருந்த சாக்கடை கால்வாய் இடிக்கப்பட்டு புதிதாக கால்வாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் அதன் பிறகு கால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கால்வாயை ஒட்டியுள்ள வீடுகளில் வசிப்பவர்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். பலகையை தற்காலிகமாக கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தின் குறுக்காக போட்டு பயன்படுத்தி வருகின்றனர். எனவே சாக்கடை கால்வாய் பணியை விரைவில் தொடங்க வேண்டும்