கிருஷ்ணகிரி அருகே புதூர் ஏரியை சுற்றி பல்வேறு குடியிருப்புகள் அமைந்துள்ளன. குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியில் அதிக அளவில் கலக்கிறது. மேலும் ஆகாயத்தாமரைகளும் அதிக அளவில் படர்ந்துள்ளன. ஏரியின் கரையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த ஏரியில் உள்ள குப்பைகளை அகற்றி தூர் வாரி மழைநீர் தேங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.