கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் கிருஷ்ணகிரி பஸ் நிலையத்திற்கு வந்து பஸ்களில் ஏறி செல்கிறார்கள். இந்த பஸ் நிலையத்தில் உள்ள சிறுநீர் கழிக்கும் இடங்களில் அதிகம் துர்நாற்றம் வீசுகிறது. அதேபோல் பயணிகள் பலரும் திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதால் பஸ் நிலையத்தில் ஓசூர்-பெங்களூரு பஸ் நிற்கக்கூடிய பகுதிகளில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் சுகாதாரத்தை பேணிக்காக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .