கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2022-08-04 10:38 GMT
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட சாலாமேடு எல்லை காளியம்மன் கோவில் எதிரில் உள்ள சாலையில் வடிகால் வாய்க்கால் வசதி இல்லை. இதனால் கழிவுநீர், அங்குள்ள தெருக்களிலேயே வழிந்தோடுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் இதில் தலையிட்டு அப்பகுதியில் வடிகால் வாய்க்கால் வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்