கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி நகரில் சென்னை சாலையோரம் உள்ள சாக்கடை கால்வாயை தூர்வாரப்படவில்லை. இதனால் கழிவுநீர் செல்ல வழி இல்லாததால் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே கிருஷ்ணகிரி நகரில் சென்னை சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகளில் உள்ள சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரபு ,கிருஷ்ணகிரி.
-பிரபு ,கிருஷ்ணகிரி.