கம்பம் பழைய பஸ்நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள் திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடமாக மாறிவிட்டது. இதனால் அந்த வழியாக மக்கள் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மழைக்காலத்தில் சாலையில் கூட நடந்து செல்ல முடியவில்லை. சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுக்கழிப்பறை அமைத்து சுகாதாரத்தை காக்க வேண்டும்.