விளாத்திகுளம் தாலுகா குளத்தூர் ஊராட்சி பனையூர் கிராமம் யாதவர் தெருவில் பத்திரகாளியம்மன் கோவில் எதிரில் உள்ள கழிவுநீர் கால்வாய் உடைத்து தண்ணீர் செல்ல முடியாமல் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் தூர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் தொல்லையும் அதிகமாக உள்ளது. மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, இதை சீரமைத்து தர அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்.