பார்வதிபுரம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர் ஓடைகள் மூலம் பல இடங்களில் அந்த பகுதியில் ஓடும் கால்வாயில் கலக்கிறது. இதனால், தண்ணீர் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும், அதில் குளிப்பவர்களுக்கு தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை கால்வாயில் கலக்காமல் இருக்க மாற்று திட்டம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர்.எஸ்.ராஜன், வைத்தியநாதபுரம்.