தேனி அல்லிநகரம் நகராட்சி 10-வது வார்டு தெற்கு தெருவில் உள்ள சாக்கடை கால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. அவ்வப்போது பணியாளர்கள் வந்து அகற்றி செல்கின்றனர். ஆனால் கால்வாய் கழிவுநீர் அதிகமாக வரும்போது நிரம்பி சாலையில் ஓடுகிறது. எனவே சாக்கடை கால்வாயை முழுமையாக தூர்வார வேண்டும்.