பவானியில் இருந்து மேட்டூர் செல்லும் ரோட்டில் உள்ள ஜீவா நகர், பாலாஜி நகர் குடியிருப்பு பகுதிகளில் சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி தெருவில் ஓடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு்ள்ளது. பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே சாக்கடை வடிகால் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?