மதுரை மாவட்டம் சர்வேயர் காலனி வார்டு எண் 11 பாண்டியன் நகர் 8 வது தெருவில் பாதம் சாக்கடை பாரமரிப்பு பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி சாலை சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.