ஈரோடு சூரம்பட்டிவலசு அருகே உள்ள சங்குநகர் லேன்-7 பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் ஆறுபோல் ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. உடனே வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?