ஈரோடு பெரியவலசுவில் உள்ள வடிகாலில் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே வடிகாலில் ஏற்பட்டுள்ள கழிவுகளை அப்புறப்படுத்தி கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.