கழிவுநீரால் துர்நாற்றம்
திருப்பூர் புளியமர தோட்டம் 2-வது வீதியில் தார்ச்சாலை மழையினால் சேதமாகியுள்ளது. அந்த பகுதியில் பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. பள்ளத்தால் இவ்வழியாக வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாய நிலையில் உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கவனித்து பள்ளத்தை மூட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- வின்சென்ட்ராஜ், திருப்பூர்.
98767 37632