தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-08-27 14:58 GMT

கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மேட்டுவளவு ரோட்டில் இருந்து பாரியூர் இணைப்பு ரோடு செல்லும் ஓரம் கழிவுநீர் ஓடைசெல்கிறது. அதில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால் கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் நிலை உள்ளது. வாகனங்களும் சென்று வருகின்றன. உடனே ஓடையில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்