சகாயநகர் ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்கல்விவிளை கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வடிகால் ஓடையை பராமரிக்காததால் வடிந்தோட வழியில்லாமல் குடிநீர் தொட்டியின் அருகில் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வடிகால் ஓடையை தூர்வாரி கழிவுநீர் வடிந்ேதாட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.