தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா சித்திரபட்டி போயர் கொட்டாய் முதல் பசுமைபுரம் ஆறு வரை சாக்கடை கால்வாய் இல்லாததால் கழிவுநீர் சாலையில் செல்கிறது. மழை காலங்களில் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியே செல்லும் பொது மக்கள் துர்நாற்றத்தால் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.