ஈரோடு முனிசிபல் காலனி திரு.வி.க. ரோட்டில் கிருஷ்ணசாமி வீதி அருகே சாக்கடை வடிகால் செல்கிறது. இதில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்புள்ளது. உடனே அடைப்பை சரிசெய்து கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.