ெசடிகள் அகற்றப்பட்டது
கொட்டாரம் பேரூராட்சி அலுவலகத்தின் பின்புறம் சித்திவிநாயகர் கோவிலின் மேற்கு பகுதியில் ஒரு கழிவுநீர் ஓடை உள்ளது. இந்த ஓடையில் செடி, கொடிகள் வளர்ந்து கழிவுநீர் வடிந்தோட வழியில்லாத நிலை இருந்தது. இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஓடையில் வளர்ந்திருந்த செடி,கொடிகளை அகற்றினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட ‘தினத்தந்தி’-க்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.