சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2023-07-30 18:22 GMT
திருக்கோவிலூர் தாலூகா அரியூர் கிராமத்தில் உள்ள கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளதால், கழிவுநீர் நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் சாலையில் நடந்துகூட செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி, அப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்