பண்ருட்டி பஸ்நிலையம் அருகே கடலூர் செல்லும் சாலையில் ஏடி.எம். மையம் அமைந்துள்ளது. இதன் முன்பு உள்ள கால்வாய் திறந்த நிலையில் இருப்பதால், கால்வாயை கடந்து ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க வரும் பொதுமக்கள் அதில் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை சிமெண்டு சிலாப் அமைத்து மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.