ரோட்டில் பாய்ந்தோடும் கழிவு நீர்
திருப்பூர் மத்திய பஸ் நிலையம் அருகே தாராபுரம் ரோட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன் எதிரே உள்ள கழிவு நீர் கால்வாய் நேற்று மதியம் நிரம்பி வழிந்தது. இதனால் ரோட்டில் கழிவு நீர் ஆறு போல பாய்ந்தோடியதால் இவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். இந்த பகுதியில் எப்போதும் வாகனங்கள் அதிக அளவில் வந்து சென்றவண்ணம் இருக்கும் என்பதால் ரோட்டில் பாய்ந்த கழிவு நீரால் வாகனப்போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இதேபோல் பல்லடம் ரோடு, தாராபுரம் ரோட்டில் பயணிகள் பஸ்சுக்காக காத்து நிற்கும் பகுதியிலும் கழிவு நீர் பாய்ந்து கொண்டிருந்ததால் கடும் துர்நாற்றம் காரணமாக பயணிகள் சிரமப்பட்டனர். எனவே இங்கு கழிவு நீர் கால்வாயில் நிரம்பி கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்.
சுரேஷ்,திருப்பூர்.
8973736392