திண்டுக்கல் ஒன்றியம் பள்ளப்பட்டி ஊராட்சி அந்தோணியார்தெரு பகுதியில் கருப்பணசாமி கோவில் தெருவில் கழிவுநீர் ஓடை போன்று செல்கிறது. இதனால் மக்கள் நடந்து கூட செல்ல முடியவில்லை. மேலும் துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே கழிவுநீர் செல்வதற்கு சாக்கடை கால்வாய் கட்டித்தர வேண்டும்.