திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு ராஜீவ்காந்தி நகரில் மிகப்பெரிய பள்ளம் உருவாக்கப்பட்டு அதில் இரவு நேரங்களில் கழிவுநீர் கொட்டப்பட்டு வருகிறது, பல்வேறு பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் கழிவுநீரை கொட்டிவிட்டு செல்கின்றனர். அருகில் பள்ளிகள் மற்றும் வீடுகள் இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. வயதானவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இதுகுறித்து, பலமுறை அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சம்மந்தபட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.