ஈரோடு அகில்மேடு 6-வது வீதியில் உள்ள சாக்கடை வடிகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல நாட்களாக கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்புள்ளது. உடனே அடைப்பை சரிசெய்து கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?