சாலையில் கழிவுநீர்

Update: 2023-07-05 15:42 GMT

திருவள்ளூர், வரதராஜபுரம் , திருமழிசை தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் வெளியேறும் கழிவுநீர் சாலையில் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால், தொழிற்சாலையில் பணிபுரிவோர் மற்றும் சாலையை கடந்து செல்பவர்களுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து, பலமுறை அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்